tamilnadu

img

நாளை முதல் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கு புதிய வட்டி விகிதம்!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, நாளை (மே1) முதல் சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கும், குறுகிய கால கடன்களுக்கும் புதிய வட்டி விகிதத்தை அமல்படுத்த உள்ளது. 

கடந்த மார்ச் மாதம், சேமிப்பு கணக்குகளில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் வைத்திருப்பவர்களுக்கும், ஓவர்டிராஃப்ட் மற்றும் கேஷ் கிரெடிட் கணக்குகள் வழியாக கடன் பெறுபவர்களுக்கும், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டியை சார்ந்து புதிய வட்டி விகிதங்கள், வரும் மே 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு பணக் கொள்கை முடிவின் போதும், ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. இப்போது ரெப்போ வட்டி விகிதத்தின் அளவு 6 சதவிகிதமாக இருக்கிறது. 

இந்நிலையில், 1 லட்சம் ரூபாய்க்கு மேல், எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்பவர்களுக்கு 3.25 சதவீதம் வட்டியும், 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருப்பவர்களுக்கு 4 சதவீதம் வட்டியும் , 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் பணம் வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதம் 3.5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து, ஓவர்டிராஃப்ட் கடன்கள் மற்றும் கேஷ் கிரெடிட் கணக்குகளின் கீழ் கடன் வாங்கி இருக்கும் தொகைகளுக்கு , ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்துடன், 2.25 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

;